நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து பாய்ந்து விபத்து

நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து பாய்ந்து விபத்து
X

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.

நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - கோபிசெட்டிபாளையம் - கோவை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்தியூரில் இருந்து வியாழக்கிழமை (நேற்று) மதியம் புறப்பட்ட இப்பேருந்து நம்பியூர் வழியாகத் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை அந்தியூர் மாத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ஆறுமுகம் (56) என்பவர் இருந்தார். பேருந்தில், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.


இந்நிலையில், நம்பியூருக்கு வந்த இந்த பேருந்து மாலை 3.30 மணி அளவில் அங்கிருந்து கோவை நோக்கி சென்றது. நம்பியூர் துணை மின்நிலையம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை மற்றும் கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த வரப்பாளையம் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை முந்தி செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!