புன்செய்புளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து

புன்செய்புளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து
X

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.

புன்செய்புளியம்பட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப் பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

புன்செய்புளியம்பட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப் பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று திங்கட்கிழமை (நேற்று) மதியம் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ராமசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்நிலையில், பேருந்து மாதம்பாளையம் அருகே, சாலை வளைவில் திரும்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இதில், 10க்கும் பயணிகள் மேற்பட்ட காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, புன்செய்புளியம்பட்டி போலீசார் நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஸ்டியரிங் லாக் ஆனதால் கட்டுப்பாட்டை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!