ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பயிற்சி முகாம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு மாநிலக் கிளை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளைஞர் செஞ்சிலுவை சங்க கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கல்லூரி வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது.
இம்முகாமின் தொடக்க விழாவில் ஈரோடு மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜு வரவேற்புரை வழங்கினார். முதல்வர் வாசுதேவன் தலைமை ஏற்றார். தாளாளர் தங்கவேல் மற்றும் ஈரோடு மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாக குழு உறுப்பினர் தமிழ்நாடு கிளை தாமஸ் ஜான் தொடக்க உரை வழங்கினார். தொடக்க விழாவின் நிறைவாக இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் ராஜா குமார் நன்றிரை வழங்கினார்.
மதிய அமர்வில் இளைஞர் செஞ்சிலுவை சங்க இணை ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் நாராயணா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமர்வுகளாக நிகழ்வு நடைபெற்றன. முதல் அமர்வில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் கலைக்கோவன் வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் தலைப்பில் ஊக்க உரை வழங்கினார். இரண்டாவது அமர்வில் ஈரோடு மாவட்டக் கிளை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பங்களிப்பு குறித்து உரை வழங்கினார்.
மூன்றாவது அமர்வில் சேலம் மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில அளவிலான முதல் உதவிப் பயிற்சியாளர் பிரபாகரன் முதல் உதவி குறித்து விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கினார். நான்காவது அமர்வில் பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அதுல்யா ராஜ் தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நிறைவு விழாவில் ஈரோடு அக்சயம் ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்ல நிறுவனர் மற்றும் தலைவர் நவீன் குமார் நிறைவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஈரோடு மாவட்ட செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜு நன்றியுரை வழங்கினார். இம்முகாமில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu