பர்கூர் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி டிப்பர் லாரி

பர்கூர் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி டிப்பர் லாரி
X

பர்கூர் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி டிப்பர் லாரி.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டிப்பர் லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு பர்கூர் நோக்கி நேற்று (7-ம் தேதி) ஒரு மினி டிப்பர் லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. லாரியை பர்கூர் ஈரெட்டியை சேர்ந்த கெஞ்சன் மகன் மாதேவன் (வயது 23) என்பவர் லாரியை ஓட்டினார்.

இந்நிலையில், லாரி பர்கூர் மலைப்பாதையில் செட்டிநாடு என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அதை சாய்த்துவிட்டு, தடுப்பு சுவரையும் உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து நின்றது.

இந்த விபத்தில் மினி டிப்பர் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதில், டிரைவர் மாதேவன் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பள்ளத்தில் இருந்து மாதேவனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture