ஈரோடு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மறைந்த எம்பி கணேசமூர்த்திக்கு நினைவேந்தல்

ஈரோடு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மறைந்த எம்பி கணேசமூர்த்திக்கு நினைவேந்தல்
X

Erode news- ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கணேசமூர்த்தி எம்பி நினைவேந்தல் நிகழ்ச்சியில் எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மறைந்த எம்பி கணேசமூர்த்திக்கு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மறைந்த எம்பி கணேசமூர்த்திக்கு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி எம்பியின் நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் திருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கணேசமூர்த்தி எம்பியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் வேலா சுந்தர்ராஜன் ,மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்கதுரை, மாதேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாநகரத் தலைவர் அந்தோணி யூஜின், மாநகரச் செயலாளர் பாலமுருகன், மாநகர பொருளாளர் சாதிக் பாட்சா, மாநகர துணை தலைவர் பிரேம்குமார், மாநகர துணை செயலாளர் கமலஹாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி எம்பியுடன் தங்களுக்கு நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business