ஈரோட்டில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் சரிபார்க்கும் கூட்டம்

ஈரோட்டில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் சரிபார்க்கும் கூட்டம்
X

வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் இறுதி ஒத்திசைவு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை சரிபார்க்கும் இறுதி ஒத்திசைவு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (29ம் தேதி) நடந்தது.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை சரிபார்க்கும் இறுதி ஒத்திசைவு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (29ம் தேதி) நடைபெற்றது.

நடந்து முடிந்த ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை சரிபார்க்கும் இறுதி ஒத்திசைவு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (29ம் தேதி) நடந்தது.

இந்த கூட்டத்திற்கு, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார். தேர்தல் செலவினப் பார்வையாளர் லட்சுமி நாராயணா முன்னிலை வகித்தார்.


இதில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவினங்கள் குறித்த பதிவேடு, வங்கி கணக்கு புத்தகம், வரவு செலவு ரசீதுகள் உள்ளிட்டவைகளை, தேர்தல் ஆணையம் வழங்கிய செலவின பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் செலவினப் பார்வையாளரும் ஆய்வு செய்தனர்.

இக்கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குருநாதன் (கணக்குகள்), தேர்தல் பிரிவு அதிகாரிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?