பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு
X
Erode news- தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் பற்றிய தீயை  தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Erode news, Erode news today- பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பேட்டரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்தார்.

தேசிய நெடுஞ்சாலை 544 சேலம் - கோவை செல்லும் ரோட்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் வந்த போது, லாரியின் டீசல் டேங்க் வெடித்ததால், லாரி முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது.


மளமளவென பற்றிய தீயானது லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவலின் அடிப்படையில், பெருந்துறை தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அடைத்தனர். இதனால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பேட்டரி தீயில் கருகிய சேதமானதோடு, லாரியும் எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தீ விபத்து நடந்த சாலையில் அதிக அளவிலான டீசல் கொட்டியுள்ளதால் தீயணைப்புத் துறையினர் மணலை கொட்டியும், தண்ணீரை பீச்சி அடித்தும் சாலையில் கொட்டிய டீசலை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil