டி.என்.பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்தியவர் கைது

டி.என்.பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்தியவர் கைது
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பள்ளம் அருகே பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அனுமதியின்றி 30 மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த கொங்கர்பாளையம் மேற்குதெருவை சேர்ந்த முருகன் மகன் கருப்புசாமி (வயது 24) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது