வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
X

ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு கிராம வங்கி, ஈரோடு பஜார் கிளை, வாசன் கண் மருத்துவமனை, ஈரோடு ஆர்த்தோ சென்டர் மற்றும் எக்ஸல் கல்லூரியின் பொது மருத்துவத்துறை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.


இதில், பேரமைப்பின் ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் உதயம் பி.செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் நெல்லை ஏ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பி.ரியாஷ் அகமது, மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார், அசோகபுரம் அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் ஜி.கமலஹாசன், சங்க அலுவலக செயலர் கௌதம், தமிழ்நாடு கிராம வங்கி ஈரோடு பஜார் கிளை மேலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற இம்மருந்துவ முகாமில் பொதுமக்கள், வணிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india