ஈரோட்டில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோட்டில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்
X

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் மனீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் லதா (பொ), மாவட்ட வன அலுவலர்கள் வெங்கடேஷ் பிரபு (ஈரோடு), சுதாகர் (ஆசனூர்), துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வராஜன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி திவ்யபிரியதர்ஷினி உட்பட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!