ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.
ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு வரும் ஜூன் 3ம் தேதி துவங்குகிறது.
இதுதொடர்பாக ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்து இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது, வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி முதல் துவங்கி ஜூன் மாதம் 18ம் தேதி வரை 13 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியின் போது சீருடை உணவு இலவசமாக அளிக்கப்பட்டு.
இப்பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு, 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu