ஈரோட்டில் கால்பந்து விளையாடிய வீரர் மயங்கி விழுந்து திடீர் உயிரிழப்பு
Erode news- கால்பந்து வீரர் சுப்பிரமணியம் (கோப்பு படம்)
Erode news, Erode news today- ஈரோட்டில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு சூரம்பட்டிவலசு, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 46). இவர் பத்திர எழுத்தராக வேலை பார்த்து வந்தார். இதுதவிர, சுப்பிரமணியம் கால்பந்து போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை அவர் சங்கு நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது சுப்பிரமணியம் திடீரென மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சுப்பிரமணியம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த கால்பந்து வீரர் சுப்பிரமணியம் தனது அணிக்காக பல்வேறு இடங்களில் கால்பந்து போட்டியில் விளையாடி அணிக்காக வெற்றி பெற்று தந்துள்ளதாக சக வீரர்கள் தெரிவித்தனர்.
கால்பந்து விளையாடிய வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu