பவானி காவிரிநகரில் தண்ணீர் சூழ்ந்த வீட்டினுள் புகுந்த நாகப்பாம்பு

பவானி காவிரிநகரில் தண்ணீர் சூழ்ந்த வீட்டினுள் புகுந்த நாகப்பாம்பு
X
பாம்பு பிடிக்கும் கருவி மூலம் தீயணைப்பு துறையினர் பாம்பை மீட்டனர்.
பவானி அருகே உள்ள காவிரி நகரில் தண்ணீர் சூழ்ந்த வீட்டினுள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் கரையோரத்தில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காவிரி நகரில் கணேசன் என்பவரது வீட்டினை தண்ணீர் சூழ்ந்த நிலையில், வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த பவானி தீயணைப்பு துறையினர் வீட்டின் மேற்கூரையில் இருந்த 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு மீட்டனர். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டு சென்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்