அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

Erode news- சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Erode news, Erode news today- அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு, சரக்கு வாகனம் ஒன்று ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடும்போது, சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மலைப்பாதையில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சரக்கு வாகன ஓட்டுநரான கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் சரக்கு வாகனம் சாலையின் ஓரமாக கவிழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு வாகனத்தில் இருந்த தேங்காய்கள் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, கிரேன் உதவியுடன் சரக்கு வாகனம் மீட்கப்பட்டது. இவ்விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story