மொடக்குறிச்சி அருகே சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கார் தீப்பற்றி எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைப்பதையும் படத்தில் காணலாம்.
மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). கேபிள் காண்ட்ராக்டர். இவரது மனைவி லாவண்யா. இவரது குழந்தைகள் தர்ஷினி, கீர்த்தி. லாவண்யாவின் அண்ணன் மனைவி அனிதா மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆகியோருடன் காரில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் காலபைரவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மொடக்குறிச்சி வழியாக நஞ்சை ஊத்துக்குளியில் இருந்து நட்டாத்திஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர். நஞ்சை ஊத்துக்குளி டாஸ்மாக் கடை அருகே சென்றபோது திடீரென்று காரில் இருந்து புகை வெளிவர தொடங்கியது.
இதனை கண்ட காரை ஓட்டி வந்த சதீஷ் திடீரென்று காரை நிறுத்தி அனைவரையும் காரை விட்டு இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து காரை திறக்க முயன்ற போது போது கார் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மொடக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஈரோடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காரில் மின் கசிவு காரணமாக தீ பற்றிக் கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொடக்குறிச்சி பகுதியில் திடீரென தீப்பற்றி கார் எரிந்தது அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu