ஈரோட்டில் நாளை மகளிா் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்

ஈரோட்டில் உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரைக் கண்டறியும் முகாம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை மகளிா் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்
X

பைல் படம்.

ஈரோட்டில் உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரைக் கண்டறியும் முகாம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான 'வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது' ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும். நிதிசேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிறதொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டமானது 5 வட்டாரங்களில் 77 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல்,வங்கிக் கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை 'மதி சிறகுகள் தொழில் மையம்' மூலமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது. தொழில் நிறுவன வளர்ச்சியின் அளவு பெரிதாக, பெரிதாக தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது.

உதாரணமாக மார்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள். இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிர் தொழில் முனைவோருக்கு குறிப்பாக கிராமப்புற மகளிர் தொழில் முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேற்க்கண்ட சிறப்பான சேவைகளை பெற பெண்கள் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற. தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் நாளை (14ம் தேதி) புதன்கிழமை ஈரோடு பில்டர்ஸ் அசோசியேஷன் வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர் நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தொழில் கனவுகளை அடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைக்கப்படுகிறது. தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமாரை 9385299733 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது erd.tnrtp@yahoo.com என்ற முகவரியில் நோரிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Feb 2024 7:00 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் எதிர்காலம் மற்றும் சவால்கள்
 2. லைஃப்ஸ்டைல்
  Kanavan Manaivi Sandai Quotes In Tamil விட்டுக்கொடுப்பதால்...
 3. திருப்பரங்குன்றம்
  டெல்லி அருகே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம்
 4. தொண்டாமுத்தூர்
  தாய்ப்பாலின்றி தவிக்கும் குழந்தைகளுக்காக கோவையில் தாய்ப்பால் ஏ.டி.எம்
 5. கோவை மாநகர்
  கோவை மருதமலை இளைஞர் லண்டனில் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியுமா?
 6. கோவை மாநகர்
  ‘அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’- நடிகர் ரஞ்சித் திடீர் வாய்ஸ்
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
 8. தமிழ்நாடு
  நாளை முதல் தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்
 9. வீடியோ
  திமுக ஆட்சி எப்படி இருக்கு ? Certificate கொடுத்த TTV !#TTV #ttv...
 10. வீடியோ
  ANNAMALAI வெளியிட்ட தீடீர் வீடியோ | | காரில் சென்றுக்கொண்டே வேண்டுகோள்...