சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் தாய் யானையை சுற்றி வரும் குட்டி யானை

சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் தாய் யானையை சுற்றி வரும் குட்டி யானை
X

உயிருக்கு போராடும் தாய் யானையை சுற்றி சுற்றி வரும் குட்டி யானையை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வு காரணமாக உயிருக்கு போராடும் தாய் யானையோடு குட்டி யானை நடத்தி வரும் பாசப் போராட்டம் காண்பவர்களை கலங்கச் செய்கிறது.

சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வு காரணமாக உயிருக்கு போராடும் தாய் யானையோடு குட்டி யானை நடத்தி வரும் பாசப் போராட்டம் காண்பவர்களை கலங்கச் செய்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் பண்ணாரி பிரிவு, வடவள்ளி பீட் பிரிவு, புதுகுய்யனூர் சரகத்தில் வனத்துறையினர் இன்று (11ம் தேதி) காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு பெண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக கீழே படுத்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த பெண் யானை அருகே சுமார் 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

இதைப்பார்த்த வனத்துறையினர் உடனடியாக இது குறித்து கால்நடை குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவ குழுவினர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த பெண் யானைக்கு காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றி வருகின்றனர். குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!