வயநாடு மக்களுக்காக உண்டியல் பணம் ரூ.10 ஆயிரத்தை ஈரோடு ஆட்சியரிடம் வழங்கிய மாணவன்
வயநாடு நிலச்சரிவு சேதத்திற்கு பள்ளி மாணவன் லித்துரன் உண்டியலில் சேர்த்து வைத்த சேமிப்பு பணத்தை 10,200 ரூபாய் காசோலையாக ஈரோடு ஆட்சியரிடம் வழங்குவதற்கு கொண்டு வந்த மாணவன்.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உண்டியலில் திரட்டிய பணத்தை 5ம் வகுப்பு மாணவன் ஈரோடு ஆட்சியரிடம் வழங்கினான்.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 420-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பு மக்கள் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வடுகப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் லித்துரன் கேரளா வயநாடு ஏற்பட்ட நிலச்சரிவுக்கு அனுதாபம் அனுதாபம் தெரிவித்து அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தாண்டாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் தனது தாத்தா மணிவண்ணனுடன் உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி திரட்டினார்.
உண்டியல் மூலம் சுமார் ரூ. 10,200 பணம் திரண்டது. அந்த பணத்துடன் இன்று (12ம் தேதி) ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாணவன் லித்துரன் அதனைக் காசோலையாக மாற்றி ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் வழங்கினார். அந்த மாணவனை ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பாராட்டினார். இதே, மாணவர் சுனாமி பேரழிவுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu