ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: 96 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர்

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: 96 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர்
X
Erode news- அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படம்.
Erode news- ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (12ம் தேதி) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 96 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் முத்துசாமி பட்டம் வழங்கினார்.

Erode news, Erode news today- ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (12ம் தேதி) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 96 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் முத்துசாமி பட்டம் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா இன்று (12ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் செ.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 2018-2019-ம் கல்வியாண்டில் சேர்ந்து பயின்று, கல்வியை முடித்த 96 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.


விழாவில், அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அதன் சார்பு அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக 1986ம் ஆண்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது துவங்கப்பட்டது. 1992ம் ஆண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரை மாநில அரசு ஒதுக்கீட்டில் 40 மாணவர்களும், சாலை போக்குவரத்து நிர்வாக ஒதுக்கீட்டில் 20 மாணவர்களும் சேர்க்கை நடைபெற்றது.

2017- 2018ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை மாநில அரசு ஒதுக்கீட்டில் 55 மாணவர்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 மாணவர்களும் சாலை போக்குவரத்து நிர்வாக ஒதுக்கீட்டில் 30 மாணவர்களும் மொத்தம் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த 911 மாணவர்களும் சாலை போக்குவரத்து நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த 539 மாணவர்களும் என மொத்தம் 1450 மாணவ, மாணவியர்கள் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர்.


தொடர்ந்து, இன்று (12ம் தேதி) 2018ம் கல்வியாண்டினைச் சேர்ந்த 96 மாணவர்கள் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றனர். 2008ம் ஆண்டில் சாலை போக்குவரத்து நிர்வாகத்தின் 20 மாணவியர்கள் ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட செவிலியர் கல்லூரியில் 2018ம் ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் 40 மாணவியர்களும், சாலை போக்குவரத்து நிர்வாக ஒதுக்கீட்டில் 20 மாணவியர்களும் மொத்தம் 60 மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்றது.

தற்போது வரை சாலை போக்குவரத்து நிர்வாக ஒதுக்கீட்டில் 195 மாணவியர்களும், அரசு ஒதுக்கீட்டில் 86 மாணவியர்களும் படிப்பை முடித்து பட்டயம் பெற்றுச் சென்றுள்ளனர். 2018ம் ஆண்டில் 15 வகையான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் துவங்கப்பட்டு 382 மாணவ, மாணவியர்கள் சேர்க்கையில் நாளது வரை 118 மாணவ, மாணவியர்கள் படிப்பை முடித்துச் சென்றுள்ளனர். 2021-ம் கல்வியாண்டில் 3 வகையான முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு துவங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் 9 மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தற்போது 27 முதுநிலை மருத்துவ மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 2023ம் ஆண்டில் மருத்துவம் சார்ந்த 5 வகையான பட்டப் படிப்பு துவங்கப்பட்டு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 10 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி நடைபெறவுள்ளது. மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

இவ்விழாவில், மருத்துவ கண்காணிப்பாளர் (பொ) பேராசிரியர் செந்தில் செங்கோடன், உறைவிட மருத்துவ அலுவலர் ராணி, பேராசிரியர் மற்றும் துறை தலைவர்கள் சண்முகசுந்தரம் (பொது மருத்துவத்துறை), கோமதி (மருந்தியல் துறை), மோகனசௌந்தரம் (நுண்ணுயிரியல் துறை), சரவணக்குமார் (நெஞ்சக நோய்த்துறை) உட்பட கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்ந்த அனைத்து துறை பேராசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
How To Stop Anxiety Instantly In Tamil