ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92% விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92% விநியோகம்
X

பொங்கல் பரிசுத் தொகுப்பு.

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (18ம் தேதி) முதல் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (18ம் தேதி) முதல் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஈரோடு மாவட்டத்தில் 1,212 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து, 66 ஆயிரத்து 58 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இத்தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. மேலும் தகுதி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு விநியோக்கிக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் மட்டும் 60 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்பட்டது.

பின்னர் கடைசி 2 நாட்களில் 32 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் இதுவரை 92 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலை தொடர்பாக வெளியூரில் உள்ளவர்கள், உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு காரணத்தால் பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் வந்து கடைகளில் பெற்று செல்லலாம் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கும் பணியுடன் இம்மாதத்திற்கான வழக்கமான பொருட்கள் வழங்கும் பணியானது நாளை (18ம் தேதி) முதல் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business