ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 வாரங்களாக தினமும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று (ஏப்.,25) செவ்வாய்க்கிழமை சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 001 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 734 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 37 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 122 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!