/* */

ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு

Erode news- ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 7 மணி நிலவரப்படி 71.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
X

Erode news- ஈரோடு மக்களவைத் தேர்தல் -2024.

Erode news, Erode news today- ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினார்.

இதனிடையே, ஈரோடு தொகுதி முழுவதும் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 மணி நிலவரப்படி 13.37 சதவீதம் வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 25.37 சதவீத வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து, மதியம் 1 நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 42.23 சதவீதம் வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி வரை 64.50 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 7 மணி நிலவரப்படி 71.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On: 22 April 2024 12:39 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
 2. திருத்தணி
  காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
 3. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 4. இந்தியா
  தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
 5. இந்தியா
  பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
 6. சென்னை
  அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
 7. அரசியல்
  கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
 8. லைஃப்ஸ்டைல்
  தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
 10. ஆரணி
  ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!