ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு
X
வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுகவில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியில் மேனகா நவநீதன், தேமுதிகவில் எஸ்.ஆனந்த் மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் முதல் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதமும், காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதமும், பகல் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 59.28 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

அதனைத்தொடர்ந்து, மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 77,183 பேரும், 83,407 வாக்களார்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேரும் வாக்களித்து உள்ளனர். ஈரோடு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 10 மணி நேரத்தில் 1,60,603 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story