கொம்பு தூக்கி அம்மன் கோயில் வனப்பகுதியில் மது அருந்திய 6 பேருக்கு அபராதம்

கொம்பு தூக்கி அம்மன் கோயில் வனப்பகுதியில் மது அருந்திய 6 பேருக்கு அபராதம்
X

அந்தியூர் வனப்பகுதிக்குட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் பகுதியில் அத்துமீறி நுழைந்து மது அருந்துவதாக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள்.

அத்தாணி அருகே உள்ள கொம்பு தூக்கி அம்மன் கோயில் வனப்பகுதிக்குள் மது அருந்திய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், திருப்பூர் மாவட்டம், வாவி பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(26), சதாசிவம் (24), ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த சார்லஸ் (24), சர்க்கார் பெரியபாளையம் மணிகண்டன் (24), மணணாரைப் பாரப்பாளையம் நாகராஜ் (29), கோபி கூகலூரைச் சேர்ந்த சூர்யா(24) ஆகிய 6 பேரும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து மது அருந்திய குற்றத்திற்காக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!