ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 54 பேர் கைது

ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 54 பேர் கைது
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் கனல் கண்ணன் கைதை கண்டித்து, ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி கலை இயக்கிய மாநில தலைவர் நடிகர் கனல் கண்ணன் கைது செய்த தமிழக அரசை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த வகையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 54 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
photoshop ai tool