வார இறுதி நாள் விடுமுறை: ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Erode news- ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் (மாதிரி படம்)
Erode news, Erode news today- வார இறுதி நாட்களையொட்டி, ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில் தற்போது வார இறுதி நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோட்டிலிருந்து வாரம்தோறும், வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வசதிக்காக ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் போன்ற வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த வாரமும், ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu