அந்தியூர் அருகே குட்கா விற்ற 5 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்

அந்தியூர் அருகே குட்கா விற்ற 5 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
X

புகையிலை பொருட்கள் விற்ற கடையை பூட்டி கடைக்காரருக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் மற்றும் போலீசார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர் வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்யும் பொருட்டு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க, அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதில், ஐந்து கடைகளில் புகையிலை, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து கடைகளுக்கும் தலா ரூ.25,000 ரூபாய் அபராதம், உணவு பாதுகாப்பு துறையினரால் விதிக்கப்பட்டது. கடைகளானது அடைக்கப்பட்டது. மேலும், மீண்டும் விற்கும் பட்சத்தில், கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?