கவுந்தப்பாடியில் துப்பாக்கியால் பறவைகள் வேட்டை: 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கவுந்தப்பாடியில் துப்பாக்கியால் பறவைகள் வேட்டை: 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
X

ஏர்கன் துப்பாக்கி மூலம் பறவைகளை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ஏர்கன் துப்பாக்கி கொண்டு பறவைகளை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்து, மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கவுந்தப்பாடி அருகே ஏர்கன் துப்பாக்கி கொண்டு பறவைகளை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்து, மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஈரோடு அந்தியூர் வனச்சரகம் அத்தாணி கிழக்கு பீட் எல்லைக்கு உட்பட்ட கவுந்தப்பாடி அருகே உள்ள ஆவாரங்கட்டூர் காலனியில் உள்ள வாய்க்கால் பகுதியில் உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் தலைமையில் வனப்பாதுகாப்பு படை குழுவினர் மற்றும் அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனச்சரக பணியாளர்கள் இணைந்து ரோந்து சென்றனர். அப்போது, அங்கு ஏர்கன் துப்பாக்கி கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 5 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சலங்கபாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சபரி (வயது 25), கவுந்தப்பாடியைச் சேர்ந்த செங்குட்டுவன் மகன் மெய்யரசு (வயது 23), கோபி கலிங்கியம் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி மகன் தினேஷ் (வயது 24), தங்கராஜ் மகன் தங்கவேல் (வயது 20), கோபியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் கார்த்திக் (வயது 24) ஆகிய 5 பேர் என்பதும், இவர்கள் ஏர்கன் துப்பாக்கி கொண்டு மைனா மற்றும் கொக்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்து, வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Tags

Next Story
Similar Posts
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!
வாரத்தில் ஒரு முறை  இந்த  சூப் குடிங்க..!  உடம்பில் உள்ள நோய்கள் பஞ்சாய் பறந்துவிடும்..!
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்: ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நல உதவி திட்டங்கள்
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 256 கி.மீ., நீளத்திற்கு சாலைகள்
அம்மாபேட்டை அருகே ஆலாம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கவுந்தப்பாடியில் துப்பாக்கியால் பறவைகள் வேட்டை: 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
ஆப்பக்கூடல் அருகே மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
எலுமிச்சை இலையின் ரகசியம்.... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்னு போதும் !..
ஈரோட்டில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்
அம்மாபேட்டை, ஒலகடத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைக்கத் திட்டம்
அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!