ஈரோடு மாவட்டத்தில் 4.67 கோடி மகளிர் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்
கட்டணமில்லா அரசு நகர பேருந்து பயணத்தால் ஈரோடு மாவட்ட பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4.67 கோடி மகளிர் அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணம் செய்து வருகிறார்கள்.
மாவட்டத்தில் ஈரோடு-1 பணிமனையில் 24, ஈரோடு-3 பணிமனையில் 21, பவானி பணிமனையில் 40, பெருந்துறை பணிமனையில் 36, கொடுமுடி பணிமனையில் 15, அந்தியூர் பணிமனையில் 21, கோபி பணிமனையில் 37, சத்தி பணிமனையில் 25, கவுந்தப்பாடி பணிமனையில் 39, நம்பியூர் பணிமனையில் 45, தாளவாடி பணிமனையில் 1 நகரப் பேருந்தும் நகரப் பேருந்துகளும், என மொத்தம் 304 அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2021 முதல் அக்டோபர் 2023 வரை 4 கோடியே 67 லட்சத்து 67 ஆயிரத்து 692 மகளிர் பயணம் செய்துள்ளனர்.
அதில், ஈரோடு மாவட்ட பணிமனையின் கீழ் இயங்கும் 304 அரசி பேருந்துகளில் 4 கோடியே 64 லட்சத்து 65 ஆயிரத்து 972 மகளிர்களும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 73 மாற்றுத்திறனாளிகளும், 9 ஆயிரத்து 497 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும், 26 ஆயிரத்து 150 மூன்றாம் பாலினத்தவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயணம் செய்துள்ளார்கள். இந்த பேருந்து பயணத்தால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu