வனவிலங்குகளை வேட்டையாடும் கருவிகளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடும் கருவிகளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
X

பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் கருவிகளுடன் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்ட 3 பேர்

பவானிசாகர் அருகே வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் கருவிகளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் கருவிகளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் தணிக்கை செய்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றிதிரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகள், பிரேக் ஒயர், கத்தி, வைத்திருந்ததை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பவானிசாகர் குடில் நகரை சேர்ந்த ஓதிச்சாமி (58), புது குய்யனூரை சேர்ந்த கார்த்திக் (27), கொத்தமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த சுபாஷ் (36) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் நான்கு பேர் மீதும் வன குற்ற வழக்கு பதிந்து மூன்று பேரை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை ஈரோடு இளம் சிறார் நீதி குழுமம் நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture