அந்தியூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய வெளி மாவட்ட முதியவர் உள்பட 4 பேர் கைது

அந்தியூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய வெளி மாவட்ட முதியவர் உள்பட 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய வெளி மாவட்டத் சேர்ந்த முதியவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய வெளி மாவட்டத் சேர்ந்த முதியவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஸ்வீப்பர் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி 3 வீடுகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த இருசக்கர வாகனம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், வீடு புகுந்து திருடியவர்களை பிடிக்க அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 27), இவரின் மாமனார் கண்ணன் (வயது 75), சரவணன் (வயது 23), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் (வயது 20) ஆகியோர் என்பதும், அவர்கள் அந்தியூர் பகுதியில் தங்கி இருந்து கரும்பு வெட்டும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த 23ம் தேதி வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதும், தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself