கொடுமுடி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: கிரைம் செய்திகள்..

கொடுமுடி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: கிரைம் செய்திகள்..
X

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது:-

கொடுமுடி அருகே உள்ள சோளங்காபாளையம் பகுதியில் மலையம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(39), காமராஜபுரத்தை சேர்ந்த பழனிசாமி(43), பி.கே.வலசு பகுதியை சேர்ந்த கோபி(38), கிளாம்பாடியை சேர்ந்த குமார்(50) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை:-

சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி செல்வி (55). இவர் மேலப்பாளையத்தில் தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார். நோயால் பாதிக்கப்பட்ட செல்வி மனம் உடைந்து தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை:-

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள அரக்கன்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (33). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (27). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.‌ சம்பவத்தன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரங்கசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story