விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, ரூ. 4 லட்சம் கொள்ளை
X
பைல் படம்.
By - B.Gowri, Sub-Editor |29 March 2023 4:30 AM IST
ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சேரன் நகரில் வசிப்பவர் முருகசாமி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் முருகசாமி அவரது மனைவி பிரேமா வீட்டைப் பூட்டி விட்டு பெருந்துறையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்ற நிலையில்,
இரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 38 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றனர். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயமங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளைப் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu