ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 3.5 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 3.5 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
X

கொள்ளை போன வீட்டில் இருந்த பீரோவை படத்தில் காணலாம். உள்படம்:- கதவு உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு நாடார் மேடு அண்ணாதுரை வீதியில் பர்கத் பாவா (வயது 28) என்பவர் வாடகை வீட்டில் மனைவி மகனுடன் வசித்து வருகிறார். ஜவுளி வியாபாரியான பர்கத் பாவா கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.

இந்நிலையில், 6ம் தேதி (நேற்று) இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 3.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பர்கத் பாவாவின் குடும்பத்தினர் ஈரோடு தெற்கு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தெற்கு காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும், இக்கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!