கோபி அருகே ஓடும் பேருந்தில் 3 சவரன் நகை, 25 ஆயிரம் பணம் திருட்டு

Gold Robbery | Robbery News
X

நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு இரண்டு பெண்கள் தப்பிக்கும் சிசிடிவி காட்சி.

Gold Robbery - கோபியில் ஓடும் அரசு பேருந்தில் 3 சவரன் நகை, 25 ஆயிரம் ரவக்க பணம் திருட்டு; நகை,பணம் திருடிய இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Gold Robbery -ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டூர் எஸ்.பி.நகரை சேர்ந்தவர் ராஜாராம்(40). லாரி டிரைவர். இவரது மனைவி ஜானகி (33). இவர்களுக்கு கிருத்திக்ராஜ் (10) என்ற மகனும் ஹர்சா (3) என்ற மகளும் உள்ளனர்.ஜானகி, சேலத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு மகன் கிருத்திக்ராஜ் மற்றும் மகள் ஹர்சாவுடன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

சேலத்தில் இருந்து ஈரோடு வந்த ஜானகி, ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லும் அரசு பேருந்தில் வந்துள்ளார். பேருந்து பொலவக்காளிபாளையம் வரும் போது செல்போனில் அழைப்பு வரவே பையில் இருந்த செல்போனை எடுத்து பேசி விட்டு மீண்டும் பைக்குள் வைத்து இருந்துள்ளார். அதே பையில் 3 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் பணத்தை வைத்து இருந்துள்ளார்.

ஜானகி, நாயக்கன்காடு என்ற இடத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய போது அதே பேருந்தில் அவருடன் நின்று கொண்டு இருந்த இரு பெண்கள், ஜானகியை நெருங்கி கொண்டு இறங்கி உள்ளனர். மேலும் ஜானகியின் பையையும், ஒரு பெண் எடுத்து கொடுத்து உள்ளார். ஜானகி பேருந்தில் இருந்த இறங்கிய பின்பு பையை பார்த்த போது, பையில் இருந்த, நகை மற்றும் பணம் இருந்த பர்ஸ் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகி, அந்த பெண்களை தேடிய போது, இரு பெண்களும் வேக வேகமாக சென்று அந்த வழியாக சென்ற ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜானகி அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து நகை மற்றும் பணம் திருடிய இரு பெண்களை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது