சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
X

கோப்பு படம்

சித்தோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பவானி அருகே உள்ள சித்தோட்டை அடுத்த சொட்டையம்பாளையம், கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி இந்திராணி (வயது54). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முருகேசன் உயிரிழந்த நிலையில், தனது மகன் நாகராஜ் (39) மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருவதோடு, அப்பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று வீட்டுக்கு இந்திராணி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே பைக்கில் அதிவேகமாக வந்த இருவர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம். இதுகுறித்து புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture