கோபி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 3 பேர் கைது

கோபி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 3 பேர் கைது
X

Erode news- கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Erode news, Erode news today- கோபி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் வனத்துறை சோதனைச்சாவடியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் 18 டெட்டனேட்டர்கள், அதை வெடிக்க பயன்படுத்தும் 15 மீட்டர் ஒயர் ஆகியவை இருந்தன.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூரை சேர்ந்த அருள்குமார் (வயது 22), பாபு (வயது 45), பொள்ளாச்சி தொண்டாமுத்தூரை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) ஆகியோர் என்பதும், அவர்கள் தனியார் குவாரியில் இருந்து விவசாய கிணற்றில் பயன்படுத்துவதற்காக வெடிபொருட்களை வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் முறையான பாதுகாப்பு இல்லாமல் வெடிபொருட்களை கொண்டு சென்றதாக அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
ai solutions for small business