பவானிசாகர் அருகே ரூ.2.40 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது

பவானிசாகர் அருகே ரூ.2.40 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட மல்லிகா, சண்முகம், ராஜூ.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தடையில்லா சான்று வழங்க விவசாயிகளிடம் ரூ.2.40 லட்சம் லஞ்சம் பெற்ற, ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், செயலாளர் என மூன்று பேரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பவானிசாகர் அருகே தடையில்லா சான்று வழங்க விவசாயிகளிடம் ரூ.2.40 லட்சம் லஞ்சம் பெற்ற, ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், செயலாளர் என மூன்று பேரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ், ரவிச்சந்திரன். விவசாயிகளான இருவரும் தங்களுடைய தோட்டத்துக்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், தடையில்லா சான்று வழங்க ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஊராட்சி தலைவர் மல்லிகா (வயது 55), துணைத்தலைவர் சண்முகம் (வயது 44), ஊராட்சி செயலாளர் ராஜூ (வயது 54) ஆகியோர் கேட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரவிச்சந்திரனிடமும், கனகராஜிடமும் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். அதன்படி, இருவரும் கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்றனர். ரசாயனம் தடவி ரூபாய் நோட்டுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், செயலாளரிடம் லஞ்சமாக கொடுத்தனர்.

பணத்தை பெற்ற 3 பேரையும் வளாகத்தில் மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Tags

Next Story