மொடக்குறிச்சியில் கோயில் திருவிழாவுக்காக வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
Erode News- வீட்டில் சாராயம் காய்ச்சிய கார்த்திகேயன், கார்த்திக் மற்றும் குமார் ஆகிய மூவரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
Erode News, Erode News Today- மொடக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவுக்காக வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டுக்குள் சந்தேகப்படும் வகையில் நபர்கள் நடமாட்டம் இருந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் 10 லிட்டர் சாராயம், 35 லிட்டர் ஊறல், சாராய ஊறல் மற்றும் அதற்கான பெரிய பாத்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்குதோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40), அவல்பூந்துறை பழனி கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த குமார் (வயது 34), பூத்துறைசேமூர் லிங்ககவுண்டன்வலக அம்பேத்கர்நகரை சேர்ந்த செல்வகுமாரின் மகன் கார்த்தி (வயது 28) ஆகிய 3 பேரும் கோயில் திருவிழாவுக்காக சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீஸ் அவர்களை கைது செய்து அவரிடம் 10 லிட்டர் இருந்து சாராயம், 35 லிட்டர் சாராய ஊறல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu