உங்களைத் தேடி உங்கள் ஊரில்: ஈரோடு வட்டத்தில் 2வது நாளாக ஆட்சியர் ஆய்வு
Erode news- ஈரோடு பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி வண்ணாங்காட்டு வலசு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்துரையாடிய போது எடுத்த படம்.
Erode news, Erode news today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், 2வது நாளாக ஈரோடு வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (19ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு வட்டத்தில் நேற்று (18ம் தேதி) பல்வேறு அரசு அலுவலகங்களில் துறைசார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 2வது நாளான இன்று (19ம் தேதி) ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 17 நேரு வீதியில், தூய்மை பணியாளர்கள் வீட்டு கழிவுகள் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் குப்பைகளை பிரித்து சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
மேலும், அதே பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவினை ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, வார்டு எண் 5, பச்சப்பாளி மேடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம், பால் கொள்முதல் செய்யப்படும் அளவு, விற்பனை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி வண்ணாங்காட்டு வலசு பகுதியில், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், கழிவுநீர் வாய்க்கால் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவினை சுவைத்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), ரமேஷ் (சத்துணவு), மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu