ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 274 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 274 மனுக்கள் அளிப்பு
X

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 274 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 274 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை தவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 1 நபரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதியமை தொடர்பாக முதல் பரிசினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையைச் சார்ந்த மாலதிக்கு (முதுநிலை வருவாய் ஆய்வாளர்) ரூ.3 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும் மற்றும், இரண்டாவது பரிசினை வேளாண்மை உழவர் நலத்துறையைச் சார்ந்த தமிழ்செல்வி (உதவியாளர்) அவர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story