ஈரோட்டில் ரூ.2.74 லட்சம் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு

ஈரோட்டில் ரூ.2.74 லட்சம் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு
X

Erode news- புகையிலை பொருட்களை தீ வைத்து அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்.

Erode news- ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.74 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்.

Erode news, Erode news today- ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.74 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார். பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும், உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு செய்ததில், 59 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 59 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.12 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஈரோடு மாநகராட்சி வெண்டிபாளையத்தில் உரக்கிடங்கில் தீ வைத்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business