ஈரோடு மாவட்டத்தில் 10 மாதங்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு மாவட்டத்தில் 10 மாதங்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டம்.

Erode News | ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போக்சோ குற்றவாளிகள், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருபவர்கள், கொலை வழக்குகளில் தொடர்புடை யவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 போலீஸ் சப்- டிவிஷன் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!