அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு அளிப்பு

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு அளிப்பு
X

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள அந்தியூர் உள்வட்டத்தில், அந்தியூர், கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், பச்சாம்பாளையம், பூதப்பாடி, ஒட்டபாளையம், பூனாச்சி, முகாசிப்புதூர், அட்டவணைப்புதூர், பட்லூர் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.


தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் ஆ.தியாகராஜன் தலைமையில் நடந்த ஜமாபந்தியில், அந்தியூர் பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நாளை பர்கூர் உள் வட்டத்திற்கான ஜமாபந்தி நடக்கிறது.ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் , துணை தாசில்தார் நல்லசாமி, அந்தியூர் வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!