கோபிசெட்டிபாளையம் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது
erode district news-கைது செய்யப்பட்ட பெரியசாமி.
erode district news-ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி..என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் கிராமம் அருகே வனப்பகுதியான வேதபாறை பள்ளம் கத்தாழைமடுவு என்ற இடத்தில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்துவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடமான கத்தாழை மடுவு என்ற இடத்தில் சென்று பார்க்கையில் 6-பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கட்டைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.
வனத்துறையினர் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் தப்பியோட முயன்ற போது 2-பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர், இதில் 4-பேர் தப்பியோடினர்.பிடிபட்ட 2- நபரிடம் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், கள்ளிப்பட்டி பகவதி நகர், எஸ்டி காலனி பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் பெரியசாமி (24), நாகராஜ் (47), முத்து (45), சடையன் (55), மாருச்சாமி (40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6- பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி எடுத்து விற்பனை ஈடுபட முயன்றது தெரியவந்தது.
erode district news-சம்பவ இடத்தில் பிடிபட்ட பெரியசாமி மற்றும் 17-வயது சிறுவன் என இருவரிடம் இருந்து சுமார் 8 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் தப்பியோடிய நாகராஜ், முத்து, சடையன், மாருச்சாமி ஆகிய 4- நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu