சத்தியமங்கலம் அருகே பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா
அரிப்பம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்.
சத்தியமங்கலம் அருகே ஆளும் கட்சி திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் இன்று (28ம் தேதி) கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக வார்டு கவுன்சிலர்கள் சுஜாதா (மூன்றாவது வார்டு), சத்யபிரியா (ஏழாவது வார்டு) ஆகிய இரண்டு பேர் தீர்மான நோட்டில் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற வில்லை. வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என பேரூராட்சி தலைவரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு, தலைவர் அப்படி எல்லாம் கணக்கு காட்ட முடியாது. என்ன வேண்டுமென்றால் செய்துக்கோங்க,என கூறி விட்டு கிளம்பி சென்று விட்டார். இதனால், இரண்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவு வாயில் படியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் குமார் அலுவலகம் வந்து சம்மந்தப்பட்ட இரண்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் .
இதனையடுத்து, இரண்டு கவுன்சிலர்களும் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 11 மணிக்கு ஆரம்பித்த தர்ணா போராட்டம் மதியம் 3.30 மணிக்கு முடிவு பெற்றது. ஆளும் கட்சி பேரூராட்சி தலைவரை கண்டித்து ஆளும் கட்சி கவுன்சிலர்களே தர்ணாவில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu