அந்தியூரில் பறிமுதல் செய்யப்பட்ட 1,545 கிலோ குட்கா தீ வைத்து அழிப்பு

அந்தியூரில் பறிமுதல் செய்யப்பட்ட 1,545 கிலோ குட்கா தீ வைத்து அழிப்பு
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சரக்கு வாகனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1,545 கிலோ குட்கா பொருட்களை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

அந்தியூரில் சரக்கு வாகனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1,545 கிலோ குட்கா பொருட்களை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் உள்ள தோப்பூரில் வாகன சோதனையில் நேற்று முன்தினம் (14ம் தேதி) ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், சிறிய ரகசிய அறை அமைத்து உள்ளே மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.9.79 லட்சம் மதிப்பீட்டிலான 1,545 கிலோ குட்கா பொருட்களையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அழிக்க முடிவு செய்த போலீசார், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டை மயானத்தில் துப்புரவு பணியாளர்களை கொண்டு அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஸ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை தீ வைத்து அழித்தனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி