100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி 150 அடி உயரத்தில் விழிப்புணர்வு பலூன்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி 150 அடி உயரத்தில் விழிப்புணர்வு பலூன்
X

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 120 அடி உயரத்தில் ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பறக்க விட்டார்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 120 அடி உயரத்தில் ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பறக்க விட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்தில், நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ண்ட் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் கோலங்கள் வரைந்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக மேல் தளத்தில், தேர்தல் நாள் ஏப்ரல் 19ம் தேதி அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த 10 அடி சுற்றளவு மற்றும் 10 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனை வானில் 150 அடி உயரத்தில் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business