கோபிசெட்டிபாளையம் அருகே கருப்பராயன் கோயிலுக்கு 15 அடி உயர அரிவாள் காணிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே கருப்பராயன் கோயிலுக்கு 15 அடி உயர அரிவாள் காணிக்கை

கருப்பராயன் கோயிலுக்கு கிரேன் மூலம் கொண்டு வரப்பட்ட 15 அடி உயர அரிவாள்.

கோபிசெட்டிபாளையம் அருகே நாகர்பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு 15 அடி உயர இரும்பு அரிவாளை பக்தர் காணிக்கையாக வழங்கினார்.

Erode Today News - கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு 15 அடி உயர இரும்பு அரிவாளை பக்தர் காணிக்கையாக வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நாகர்பாளையம் பகுதியில் பழமையான 18ம் படி கொறை கருப்புசாமி கோயில் என்ற கருப்பராயன் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து பூஜை செய்தும், பக்தர்கள் தங்கள் வேண்டிக்கொண்டு கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக்கடனை செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (15ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில், நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டி, பக்தர் ஒருவர் 15 அடி உயர அரிவாளை கிரேன் மூலம் கொண்டு வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இந்த அரிவாளை கண்டு அங்கு இருந்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

Tags

Next Story