மாமல்லபுரத்தில் இருந்து அந்தியூர் வந்த 11 அடி ஆஞ்சநேயர் சிலை
11 அடி ஆஞ்சநேயர் சிலை வாகனத்தில் கொண்டு வரப்பட்ட போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சிங்கார வீதியில் கோனேரி பெருமாள் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான, ஸ்ரீதேவி, பூதேவி கோனேரி பெருமாள் உள்ளிட்ட 11 சிலைகளை கோவிலில் பிரதிஷ்டை செய்ய, மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைஞர்கள் விக்கிரகங்களை செதுக்கினர்.
சிலைகள் செதுக்கும் பணி நிறைவடைந்த நிலையில், நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோனேரி பெருமாள் சிலை உள்ளிட்ட 11 சிலைகளும் அந்தியூர் கொண்டு வரப்பட்டன. இதில், கோவிலில் பிரதிஷ்டை செய்ய, ஒரே கல்லிலான இரண்டு டன் எடையுள்ள 11 அடி உயரமுள்ள சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையும் கொண்டு வரப்பட்டன.
மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து சிலைகளுக்கும், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக சிங்கார வீதியில் உள்ள கோனேரி பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட சிலைகள், பிரதிஷ்டை செய்வதற்காக, தினம் ஒரு விஷேஷ பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.இதற்கான ஆன்மிக பணிகளை கோனேரி பெருமாள் கோவில் வழிபாட்டுக்குழுவினர் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu